என்னைப் பற்றி
ஹட்டனின் மலையக மண்ணில் வளர்ந்த நான், என் கற்பனைகளை கதைகளாக எழுதுகிறேன்.
என் கதைகள் மலையக வாழ்க்கையின் வாசனையில் பிறக்கின்றன — காதல், கனவுகள், நினைவுகள் என உணர்வுகளின் ஆழத்தை வாசகரின் இதயம் தொடும் விதத்தில் எழுத முயல்கிறேன்.
என் நாவல்கள்
எப்போதும் பார்த்து வாசித்த அந்த காதல் கதைதான். ஆனால், கதையின் விறுவிறுப்பை அதிகரிக்கவும், அடுத்த பக்கத்தை கொஞ்சம் எதிர்பார்ப்போடு திருப்பச் செய்யும் விதமாக, இதில் ஒரே கதையை மாறன், பிரபா மற்றும் ஸ்ரீ என மூவரின் பார்வையில் இருந்து எழுதியிருக்கிறேன். மாறனின் பார்வையில் கதையை பார்க்கும் போது வாசகர்களுக்கு சில இடைவெளிகளும், பதில் இல்லாத சில கேள்விகளும் இருக்கும். அதை பிரபாவின் பார்வை நிரப்பும். அதில் வரும் இடைவெளிகளுக்கு ஸ்ரீயின் பார்வை பதில் கூறி, அந்த இடைவெளிகளை முழுமையாக்கும்.
இந்தக் கதை என் பல்கலைக்கழக வாழ்க்கையின் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதப்பட்டது. கதையின் களம் திருகோணமலையிலும் ஹட்டனிலும் அமைந்துள்ளது. கதை நாயகன் கலையின் பார்வையில் இந்தக் கதையை நீங்கள் வாசிப்பீர்கள். வாசகர்களுக்கு கதையின் விறுவிறுப்பை கூட்டவும், அடுத்தடுத்த பக்கங்களை எதிர்பார்ப்போடு திருப்பச் செய்யவும், இரண்டு வேறுபட்ட காலக்கட்டங்களின் ஊடாக இந்தப் பயணம் அமைகிறது. 1. கலையின் பல்கலைக்கழக காலம் (2019 மார்ச் 05) 2. பல்கலைக்கழகத்திற்குப் பிறகான காலம் (2026 அக்டோபர் 22) இந்த இரண்டு காலக்கட்டங்களும் இணைந்து பயணித்து, இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றாகி, கதையின் முடிவை நோக்கி நகர்கின்றன.🎓
தொடர்பு
புத்தகம் வாங்கவோ, கதைகள் பற்றி பேசவோ, அல்லது ஒரு சாதாரண வணக்கம் சொல்லவோ — எப்போதும் உங்களை வரவேற்கிறேன்.
lishanthanlisa1998@gmail.com